இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 3 Jun 2021 4:55 AM GMT (Updated: 3 Jun 2021 4:55 AM GMT)

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21,59,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்றைய தினம் 2,11,499 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் கொரோனா பரிசோதனைகளையும் அதிக அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 21,59,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் மொத்தம் 35,37,82,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story