கர்நாடகத்தில் இன்று 15,290 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


கர்நாடகத்தில் இன்று 15,290 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 18 Jun 2021 9:00 PM IST (Updated: 18 Jun 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தற்போது 1,37,050 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,96,121 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,602 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 15,290 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,25,447 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தற்போது 1,37,050 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story