டெல்லியில் கொரோனாவுக்கு போலி மருந்து: 2 டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது

டெல்லியில் கொரோனாவுக்கு போலி மருந்து தயாரித்த 2 டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த மாயாங் தலுஜா (வயது 25) என்ற வாலிபர் ஒரு சில மாதங்கள் கொரோனா தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவருக்கு மருந்து நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதிநிதியான வாசிம் கான் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகளை வழங்குவதாக வாட்ஸ்அப் குழுக்களில் விளம்பரம் செய்துள்ளனர்.
இதை அறிந்த மருத்து கட்டுப்பாட்டுத்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தது. அதன்படி டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அவர்கள் விற்பனை செய்தது போலி மருந்து என்பதும், இதன் பின்னணியில் பலர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம், அவற்றை வினியோகித்த நபர்கள் உள்பட 10 பேர் கும்பலை கைது செய்துள்ளனர். இதில் மருந்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த அல்டமாஸ் உசேன் உள்பட 2 டாக்டர்களும் அடங்குவர்.
இதில் டாக்டர் அல்டமாஸ் உசேன் ஏற்கனவே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக காசியாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 8-ந்தேதி வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story