அதிவேக கார் மோதி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ: ஒருவர் பலி - அதிர்ச்சியூட்டும் வீடியோ


அதிவேக கார் மோதி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ: ஒருவர் பலி - அதிர்ச்சியூட்டும் வீடியோ
x
தினத்தந்தி 29 Jun 2021 8:09 AM GMT (Updated: 2021-06-29T13:39:41+05:30)

அதிவேக கார் மோதி ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் தொடர்பாக, அதிர்ச்சியூட்டும் வீடியோவை சைபராபாத் போலீசார் வெளியிட்டுள்ளனர்

ஐதராபாத், 

சைபராபாத்தில் நேற்று முன் தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் கொல்லப்பட்டார்.

நிஜ வாழ்க்கை சம்பவங்களைப் பயன்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சியை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் சைபராபாத் போலீசார் பதிவிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் மால் அருகே மழை நனைந்த சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், பின்னால் இருந்து ஆட்டோவை இடித்து தள்ளியது. சாலையோரத்தில் மோதியதற்கு முன் அதை கட்டுப்படுத்த முடியாமல் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ சுழண்றது. அதில் பயணம் செய்த பயணி பலியாவதையும், ஆட்டோ டிரைவர் காயமடைவதையும் அதில் காட்டப்படுகிறது.  

மது அருந்திவிட்டு வேகமாக காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக, சொகுசு கார் டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story