மத்திய பிரதேசத்தில் காரின் ரகசிய அறையில் மறைத்து 5 கிலோ தங்கம் கடத்தல்

மத்திய பிரதேசத்தில் ரூ.2.44 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பெரிய அளவில் தங்க கடத்தல் நடைபெற இருக்கிறது என வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். சந்தேகத்திற்குரிய வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தூர்-போபால் நெடுஞ்சாலையில் மங்கிலியா பகுதியருகே வாகனம் ஒன்றை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் காரில் கட்டப்பட்டு இருந்த ரகசிய அறையில் இருந்து 5 கிலோ எடை கொண்ட 8 தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவை மும்பையில் இருந்து போபால் நகருக்கு கடத்தப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.2.2 கோடி பணம் கைமாறியுள்ளது. காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story