தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 710 பேருக்கு கொரோனா

தெலங்கானாவில் தற்போது 10,101 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,34,605 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் இன்று 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,747 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 808 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தெலங்கானாவில் தற்போது 10,101 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 6,20,757 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story