காஷ்மீரில் ரூ.14 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


காஷ்மீரில் ரூ.14 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 July 2021 6:19 AM IST (Updated: 23 July 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ரூ.14 கோடி மதிப்பிலான 2 கிலோ எடை கொண்ட போதை பொருளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.


ஜம்மு,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 3 பேரை கைது செய்த அதிகாரிகள், ரூ.14 கோடி மதிப்பிலான 2 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை அவர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளனர்.

அவர்கள் 3 பேரும் நரேஷ் குமார், கமல் சிங் மற்றும் பல்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் சர்வதேச அளவிலான கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கடத்தலுக்காக அந்த கும்பல் ஆள் இல்லா விமானம், சுரங்க பாதைகள் மற்றும் குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.



1 More update

Next Story