மத்தியபிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் சாவு; 18 பேர் படுகாயம்


மத்தியபிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் சாவு; 18 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 July 2021 8:37 PM GMT (Updated: 2021-07-25T02:07:32+05:30)

மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

அப்போது அந்த மாவட்டத்தின் உரேகா, பிபாரியா தான், சவுமுகா கிராமங்களில் மின்னல் தாக்கியதில் தலா ஒருவர் இறந்தனர். சிம்ரகுர்ட் கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியாகினர். மேலும் இந்த கிராமங்களில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Next Story