அந்திராவில் இன்று 2,068 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


அந்திராவில் இன்று 2,068 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 30 July 2021 3:40 PM GMT (Updated: 2021-07-30T21:10:11+05:30)

ஆந்திராவில் 21,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,64,117 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,354 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,127 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,29,565 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 21,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story