தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் 10-வது நாளாக முடக்கம் + "||" + Rajya Sabha has been adjourned till 11 am, 3rd August

எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் 10-வது நாளாக முடக்கம்

எதிர்க்கட்சிகள்  அமளி; நாடாளுமன்றம் 10-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் அமளியால் நடாளுமன்றம் தொடர்ந்து 10-வது நாளாக முடங்கியுள்ளது.
புதுடெல்லி,

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இ்ந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்   நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் பொது காப்பீட்டு (திருத்த) மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர் 

அதேபோல, மாநிலங்களவையிலும் உள்நாட்டு கப்பல் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டு நாளை காலை வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   எதிர்க்கட்சிகள் அமளியால் நடாளுமன்றம் தொடர்ந்து 10-வது நாளாக முடங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு
புதுச்சேரியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்த செல்வகணபதி முதல் முறையாக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார்.
2. பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றம் 16-வது நாளாக முடக்கம்
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
3. இஸ்ரேல் நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை: மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்
‘பெகாசஸ்’ மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய அரசு எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
4. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
5. எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் 11-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.