சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 5:35 AM IST (Updated: 6 Aug 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மங்களூரு (வண்டி எண்: 06627) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 7 மற்றும் 10-ந்தேதிகளில் சென்னை சென்டிரலுக்கு பதிலாக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* மங்களூரு-சென்னை சென்டிரல் (06628) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (6-ந்தேதி) ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story