‘சிவன்’ முதல்-மந்திரியாக உள்ளபோது மத்தியபிரதேசத்தை கொரோனா எப்படி பாதிக்கும்?’ - பா.ஜ.க. பொதுச்செயலாளர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Aug 2021 8:26 PM GMT (Updated: 9 Aug 2021 8:26 PM GMT)

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்தரி சிவனாகவும், மாநிலத் தலைவர் விஷ்ணுவாக உள்ளபோது கொரோனா எப்படி பாதிக்கும் என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

போபால், 

மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாகவும், விஷ்ணு தத் சர்மா மாநில பா.ஜ.க. தலைவராகவும் உள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மத்தியபிரதேசத்தில் முதல்-மந்தரி சிவனாகவும், மாநிலத் தலைவர் விஷ்ணுவாகவும் உள்ளபோது, இங்கு கொரோனா எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் புபேந்திர குப்தா, ‘மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு ஜனவரி- மே மாதங்களுக்கு இடையில் மட்டும் 3.28 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது வழக்கமான இறப்பு விகிதத்தைவிட 54 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோது சிவராஜ்சிங் சவுகானும், விஷ்ணு தத்தும் எங்கிருந்தனர்?’ என்று கேட்டுள்ளார்.

இதற்கிடையில், முதல்-மந்திரி மற்றும் மாநிலத் தலைவரின் பெயர்களைத்தான் தருண் சுக் குறிப்பிட்டுள்ளார் என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story