ஆந்திராவில் இன்று 1,461 பேருக்கு கொரோனா; 2,113 பேர் டிஸ்சார்ஜ்


ஆந்திராவில் இன்று 1,461 பேருக்கு கொரோனா; 2,113 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 10 Aug 2021 6:03 PM IST (Updated: 10 Aug 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் தற்போது 18,882 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,85,182 ஆக அதிகரித்துள்ளது.

அந்திராவில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,564 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 2,113 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,52,736 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 18,882 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story