தமிழக சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை


தமிழக சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2021 12:36 AM GMT (Updated: 13 Aug 2021 12:36 AM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 20-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் சிறப்பு டி,ஜி.பி. சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

Next Story