தேசிய செய்திகள்

சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு + "||" + Maharashtra CM Uddhav Thackeray to attend opposition meeting called by Sonia Gandhi

சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு

சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு
சோனியா காந்தி தலைமையில் 20-ந் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்க இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமீப நாட்களாக ஒன்று திரண்டு உள்ளன.

நாடாளுமன்ற முடக்கம்
பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இரு அவைகளையும் முடக்கின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கடந்த வாரம் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அன்று நாடாளுமன்றத்தை நோக்கி சைக்கிள் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை வருகிற நடாளுமன்ற தேர்லில் கூட்டணியாக மாற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

சோனியா காந்தி அழைப்பு
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 20-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மெய்நிகர் முறையில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை. எனினும் பெகாசஸ் விவகாரம் தொடர்ந்து அரசியலில் புயலை கிளப்பி இருக்கும் சூழலில் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உத்தவ் தாக்கரே பங்கேற்பு
சோனியா காந்தி அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கலந்து கொள்கிறார். இந்த தகவலை சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இதுவரை சிவசேனா அங்கம் வகிக்காத நிலையில் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா சேர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கலந்து கொள்ள இருப்பதாக சுப்ரியா சுலே எம்.பி. தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்
கூட்டத்தில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கட்சித்தலைவர் மம்தா பானர்ஜியின் நெருக்கமான தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த மம்தா பானர்ஜி, சோனியா உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர் எதற்கு? சிவசேனா
மக்கள் பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர் எதற்கு என சிவசேனா கிண்டல் அடித்து உள்ளது.
2. பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மதம்பிடித்த யானைகளை போல செயல்படுகின்றனர்: சிவசேனா
பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மதம்பிடித்த யானைகளாக செயல்பட்டு ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
3. பாஜகவுடன் மீண்டும் சிவசேனா கூட்டணி அமைக்கிறதா? - உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது.
4. குஜராத் மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்றால் ஒரே இரவில் முதல்-மந்திரி மாற்றப்பட்டது ஏன்? சிவசேனா கேள்வி
குஜராத் மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்றால், ஒரே இரவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மாற்றப்பட்டது ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
5. பெண்கள் பாதுகாப்பு குறித்து உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனை
சாக்கிநாக்காவில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.