சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் 21 போலீசாருக்கு ஜனாதிபதி விருது


சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் 21 போலீசாருக்கு ஜனாதிபதி விருது
x
தினத்தந்தி 14 Aug 2021 8:58 PM GMT (Updated: 14 Aug 2021 8:58 PM GMT)

கர்நாடகத்தில் 21 போலீசாருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றுவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல இன்று 75-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் கர்நாடகத்தில் 21 போலீசாருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் சி.ஐ.டி. நிதி பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் உமேஷ்குமார், உள்பாதுகாப்பு பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் அருண் சக்கரவர்த்தி, பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆயுதப்படை 3-வது பட்டாலியன் கமாண்டோ ராமகிருஷ்ண பிரசாத், பெங்களூரு மல்லேசுவரம் துணை பிரிவில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றும் வெங்கடேஷ் நாயுடு.

சிக்பேட்டை துணை பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ரவி, பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்தராஜ், பெங்களூருவில் ஊழல் தடுப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தயானந்த், கலபுரகி புறநகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சங்கர்கவுடா.

பெலகாவியில் உள்ள கர்நாடக ஆயுதப்படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் மாலிகே, பெங்களூரு வயர்வெல்ஸ் பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமநாயக், மங்களூரு சைபர் கிரைம் போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மோகன், துமகூரு டவுன் விஜயநகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டுவாக பணியாற்றி வரும் முகமது முனாவர் பாஷா உள்பட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story