ஜார்கண்டில் காங்கிரஸ் தலைவர் படுகொலை
கோப்புப்படம்ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்டார்.
ராம்கர்,
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமலேஷ் நாராயண் சர்மா. 60 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலளாராக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கமலேஷ் நாராயண் சர்மாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் அந்த மர்ம நபர்கள் கமலேஷ் நாராயண் சர்மாவின் மனைவி சஞ்சலா சர்மாவையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த 55 வயதான சஞ்சலா சர்மாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






