தேசிய செய்திகள்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை + "||" + BJP MLA from Ayodhya's Gosaiganj gets 5 years in jail in 28-year-old fake mark sheet case

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருபவர் இந்திரபிரதாப் திவாரி. இவர் 1990 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சகெட் டிகிரி கல்லூரியில் 2-ம் ஆண்டு  பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பில் தோல்வியடைந்துள்ளார். 

ஆனால், இந்திரபிரதாப் போலியான மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு பட்டப்படிப்பில் 3-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். போலியான மதிப்பெண் சான்றிதழ் அளித்து கல்லூரி வகுப்பில் சேர்ந்ததாக இந்திரபிரதாப் மீது சகெட் டிகிரி கல்லூரி தலைமை ஆசிரியர் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழக்கி எம்.எல்.ஏ. இந்திரபிரதாப் கல்லூரி வகுப்பில் சேர்ந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. இந்திரபிரதாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும், 28 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை தூக்கிச்சென்ற கில்லாடி ஆடு...!
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்வி தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
2. விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர்கள் திருட்டு
உத்தரபிரதேசத்தில் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமான டயர்கள் திருடப்பட்டுள்ளது.
3. நாட்டின் வளர்ச்சிக்கு உ.பி முக்கிய பங்கு வகிக்கிறது - யோகி ஆதித்யநாத்
நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு
இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து
வினாத்தாள் கசிந்ததால் உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.