பெண்களின் உரிமைகளுக்காக காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் - ராகுல்காந்தி
பெண்களின் உரிமைகளுக்காக காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்பட பல்வேறு கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையில், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி பெண்களின் உரிமைகளுக்காக முன்னரும் உறுதுணை இருந்து வந்தது, அதேநிலையிலேயே காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும்’ என்றார்.
Related Tags :
Next Story