ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்ட பா.ஜ.க.: மெகபூபா முப்தி


ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்ட பா.ஜ.க.: மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 21 Oct 2021 8:27 PM GMT (Updated: 21 Oct 2021 8:27 PM GMT)

பா.ஜனதாவின் கொள்கைகள் ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் சமீப நாட்களாக அப்பாவி பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

அந்தவகையில் லால் சவுக் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வது போன்ற வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘காஷ்மீரின் தற்போதைய நிலையை சுருக்கமாக சொல்வது என்றால், பெண்கள், குழந்தைகள் கூட சந்தேகிக்கப்படுகிறார்கள். இதைத்தான் காஷ்மீருக்கு பா.ஜனதா கொண்டு வந்திருக்கிறது. அவர்களது கொள்கைகள் எங்களை பல பத்தாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கின்றன’ என்று மெகபூபா முப்தி பதிவிட்டுள்ளார். Next Story