போதைப்பொருள் வழக்கில் எனது வாட்ஸ்-அப் உரையாடல் தவறாக சித்தரிப்பு: ஆர்யன் கான்
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை தவறாக சித்தரிக்கின்றனர். எனது வாட்ஸ்-அப் உரையாடல்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் கற்பனையாகும். இத்தகைய விளக்கங்கள் தவறானது மற்றும் நியாயமற்றது.
அதுமட்டும் இன்றி என்னிடம் இருந்து எந்த போதைப்பொருளையும் கைப்பற்றவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அர்பாஸ் மெர்சந்த் மற்றும் அசிக் குமார் தவிர மற்ற குற்றவாளிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐகோர்ட்டில் அவரது ஜாமீன் மனு வருகிற 26-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story