ராஜேந்திர பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளி வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 3:44 AM GMT (Updated: 26 Oct 2021 3:44 AM GMT)

சொத்து குவிப்பு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

புதுடெல்லி, 

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மேல்முறையீடு மனுவில் தீர்ப்பு கூறும் வரையில், ஐகோர்ட்டு எவ்வித தீர்ப்பையும் கூறுவதற்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் ராஜேந்திர பாலாஜியின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜேந்திரபாலாஜியின் மனுவில் குறிப்பிட்டுள்ள முகாந்திரங்கள் அனைத்தும் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்பதால் அவரது மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் கூறப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார அவகாசம் கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story