எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 6:12 AM GMT (Updated: 30 Nov 2021 6:12 AM GMT)

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநிலங்களையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என இடைநீக்கம் செய்து அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களவையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Next Story