சத்தீஸ்கர்: யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 30 Nov 2021 5:15 PM IST (Updated: 30 Nov 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறால், வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 61 வயது மூதாட்டி ஒருவர் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிங்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட பலுச்சுவா கிராமத்தில், நேற்று இரவு மூதாட்டி தனது கனவருடன் ஏற்பட்ட தகராறால், கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்றுள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக யானையிடம் மாட்டிக்கொண்ட அவர், யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 204 பேர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story