ஜம்மு காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 4:28 PM IST (Updated: 26 Dec 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புல்வாமா, 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மெயின் சவுக்கில் தபால் நிலையம் அருகே உள்ள காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு போலீசார் காயமடைந்ததாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க ராணுவப்படைகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது இதுபோன்ற பல தாக்குதல்கள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Next Story