போதைப்பொருள் கடத்திய ஜிம்பாப்வே பயணி கைது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2022 2:46 PM IST (Updated: 14 Feb 2022 9:46 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஜிம்பாப்வே பயணி கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ஜிம்பாப்வே பயணி ஒருவர் வந்துள்ளார். 

அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் அவர் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடமிருந்த ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story