ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு
ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர்,
நாடு முழுவதும் கொரோனாபரவல் குறைந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரிலும் கொரோனாபரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசானது 1-8 வரை மீண்டும் பள்ளிகளை 21-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story