இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு...!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு...!
x
தினத்தந்தி 4 March 2022 9:22 AM IST (Updated: 4 March 2022 9:22 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 67 ஆயிரத்து 070 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 69 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 178 கோடியே 29 லட்சத்து 13 ஆயிரத்து 260 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story