37.15% குழந்தைகள் தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துகின்றனர் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்


37.15% குழந்தைகள் தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துகின்றனர் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
x
தினத்தந்தி 16 March 2022 9:51 PM IST (Updated: 16 March 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

தூங்கச் செல்வதற்கு முன்னர் 37.15% குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்குழந்தைகள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்த தொடங்கினர். இந்த நிலையில், குழந்தைகளிடம் செல்போன் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தியுள்ளதா? என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதா என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை என தெரிவித்தார். அதே சமயம் தூங்குவதற்கு முன் 37.15% குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், படுக்கையில் 23.30% குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story