நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்க கோரி மேல்முறையீட்டு மனு: தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கோவில்களை நிர்வகிக்க நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்க கோரி மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்து தர்ம பரிஷத் அமைப்பை சேர்ந்த கே.கே.ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அந்த குழுவில் சமூக செயற்பாட்டாளர், வக்கீல், பக்தர், தாழ்த்தப்பட்டவர், பெண் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி, இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story