இந்த ஆண்டில் காஷ்மீரில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 May 2022 9:30 PM GMT (Updated: 12 May 2022 9:30 PM GMT)

இந்த ஆண்டில் காஷ்மீரில் இதுவரை 75 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் போலீஸ் கூட்டுப்படை இணைந்து செயல்பட்டு அவ்வப்போது பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை அழித்து வருகிறது. இதுபோன்ற வேட்டையில் இந்த ஆண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படையினர் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இதில் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மட்டும் 12 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, சண்டையில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 21 வெளிநாட்டு கூலிப்படை பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை வெளியிட்டு பேசிய ராணுவ உயர் அதிகாரி, “இன்னும் ரகசியமாக செயல்பட்டு வரும் மீதமுள்ள 168 பயங்கரவாதிகளை அழிக்கும் வரையில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டர் வேட்டை தொடரும்” என்று கூறினார்.

Next Story