பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு


பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு
x
தினத்தந்தி 18 May 2022 1:38 AM IST (Updated: 18 May 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே நேற்று புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய சுப்ரியா சுலே, ஷாகு மகாராஜ், மகாத்மா ஹுலே, பாபாசாப் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மராட்டியம்.

மராட்டியத்தில் பெண் மீது தாக்குதல் நடத்த எந்த ஆணாவது தன் கைகளை ஓங்கினால் நானே அங்கு சென்று அந்த ஆண் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன். மேலும், தாக்குதல் நடத்த ஓங்கிய அந்த ஆணின் கைகளை உடைத்து அந்த ஆணிடமே கொடுத்துவிடுவேன்’ என்றார்.   

முன்னதாக, மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி பங்கேற்ற நிகழ்ச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்ப தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சில பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Next Story