கர்நாடகாவில் மனைவியின் தங்கை, மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த 2வது கணவர்


கர்நாடகாவில் மனைவியின் தங்கை, மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த 2வது கணவர்
x

கர்நாடகாவில் மனைவியின் தங்கை, மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த 2வது கணவரான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டிய அவலம் நடந்துள்ளது.பெங்களூரு,கர்நாடகாவில் வசிக்கும் பெண் ஒருவர் காவல் ஆய்வாளரான தனது கணவர் மீது அளித்துள்ள புகார் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, கடந்த 2005ம் ஆண்டு, முதல் கணவரை பிரிந்து சென்ற அந்த பெண் டி.ஆர். ஸ்ரீனிவாஸ் என்பவரை சந்தித்து உள்ளார். அவருடன் உறவை வளர்த்துள்ளார்.

முதல் திருமணத்தில் பிறந்த 2 மகள்களையும் கவனித்து கொள்வேன் என உறுதிகூறி அந்த பெண்ணை 2012ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் மணம் புரிந்துள்ளார். ஒரு சில ஆண்டுகள் சென்றதும், அந்த பெண் மீதுள்ள அவரது பார்வை மாறியுள்ளது.

வீட்டிலேயே ஆபாச படங்களை காண செய்து அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அந்த பெண் கேள்வி கேட்டதற்கு, கயிறால் இரு கைகளையும் கட்டி, பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர், பெண்ணின் சகோதரியையும் கர்ப்பிணியாக்கி உள்ளார். வீட்டில் அந்த பெண் இல்லாதபோது, மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த கொடுமைகளை பற்றி கடந்த ஜூன் 1ந்தேதி ஜே.சி. நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். வழக்கை பதிவு செய்து கொண்ட அவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டனர். எனினும், காவல் ஆய்வாளருடன் சேர்ந்து கொண்டு போலீசார் அந்த பெண் மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.

இதுபற்றி கர்நாடக ஐகோர்ட்டு அமர்வில் அந்த பெண் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டு அதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இதனை தொடர்ந்து அந்நபர் பற்றி கர்நாடக உள்துறை விசாரணை செய்து கர்நாடக ஐகோர்ட்டில் அதுபற்றிய விவரங்களை சமர்ப்பிக்க உள்ளது.


Next Story