ஜம்மு காஷ்மீரில் வீடு இடிந்து விழுந்ததில் 3 சகோதரர்கள் உயிரிழப்பு.!
ஜம்மு காஷ்மீரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று சகோதரர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கிஷ்த்வார்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று சகோதரர்கள் உயிரிழந்தனர். நாக்சேனி தாலுகாவில் உள்ள புல்லர் என்ற மலை குக்கிராமத்தில் இரவு நேரத்தில் வீடு இடிந்து விழுந்ததாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலீல் போஸ்வால் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ராஜேஷ், சஜன் மற்றும் பாப்பு ஆகிய மூன்று சகோதரர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
Related Tags :
Next Story