மத்திய பிரதேசத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு


மத்திய பிரதேசத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு
x

மத்திய பிரதேச மாநிலத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

குணா,

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து முதல் ஏழு வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளின் சடலங்கள் நேற்று மாலை கடியகலா கிராமத்தில் தண்ணீர் நிரம்பிய குழியில் மிதந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

முன்னதாக நேற்று மதியம் சிறுமிகள், விவசாய வயலுக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் சிறுமிகளைத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில் வயலுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பிய குழியில் மிதந்த நிலையில் சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

சிறுமிகள் விளையாடும் போது தவறி குழிக்குள் விழுந்திருக்கலாம் என்றும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story