நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு


நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு
x
தினத்தந்தி 14 Feb 2024 12:00 AM GMT (Updated: 14 Feb 2024 12:43 AM GMT)

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும், 27-ம் தேதி நடைபெற உள்ளது.

லக்னோ,

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 நாடாளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களின் பதவிகாலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்-சபைக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களை அந்த கட்சி நேற்று அறிவித்தது.

அந்த பட்டியலில் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜிலால் சுமன் ஆகியோர் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. அவர்கள் 3 பேரும் சட்டசபை வளாகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர். உத்தரபிரதேச சட்டசபையில் சமாஜ்வாடி கட்சிக்கு தற்போது 108 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். எனவே அந்த கட்சி சார்பில் 3 பேரை மேல்-சபை எம்.பி. ஆக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story