அரசு உத்தரவின் பேரில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் 30 தெருநாய்கள் சுட்டுக்கொலை


அரசு உத்தரவின் பேரில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் 30 தெருநாய்கள் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் 30 தெரு நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.

பெகுசராய்,

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் 30 தெரு நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. பெகுசராய் மாவட்டத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் தெருநாய்களை ஒழிக்க பாட்னாவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பாட்னாவில் இருந்து வந்த இந்த குழுவினர் பச்வாடா, கடராபாத், அர்பா, பிகம்சாக் மற்றும் ராணி ஆகிய பஞ்சாயத்துகளில் செவ்வாய்கிழமை 16 கொடூரமான தெருநாய்களையும், புதன்கிழமை 14 தெருநாய்களையும் சுட்டுக் கொன்றனர். உள்ளூர் மக்கள் அந்தக் குழுவினருக்கு தெருநாய்களைக் கண்டுபிடித்து கொல்ல உதவினார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டில், தெருநாய்களால் கிட்டத்தட்ட 10 பேர் தாக்கப்பட்டனர். இதை தடுக்கும் வகையில், நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கொல்ல உத்தரவிட்டது.


Next Story