காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு


காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2024 7:28 PM IST (Updated: 11 March 2024 4:08 PM IST)
t-max-icont-min-icon

39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் இடம்பெற்றுள்ள 'இந்தியா' கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் பத்திரிகையாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்

39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

முக்கிய வேட்பாளர்கள் விவரம்:

  • வயநாடு - ராகுல் காந்தி
  • திருவனந்தபுரம் - சசி தரூர்
  • ஆலப்புழா - கே.சி.வேணுகோபால்
  • துர்க் (சத்தீஸ்கர்) - ராஜேந்திர சாஹு
  • திருச்சூர் - முரளீதரன்
  • பத்தனம்திட்டா - ஆண்டோ ஆண்டனி
  • கண்ணூர் - கே.சுதாகரன்
  • ஷிவ்மோகா - கீதா சிவராஜ்குமார்
  • ராஜ்னம்த்லோன் (சத்தீஸ்கர்) - பூபேஸ் பாகல்
  • மாண்டியா - வெங்கட்ராம கவுடா
  • பெங்களூரு (ஊரகம்) - டி.கே.சுரேஷ்குமார்




Next Story