பாகிஸ்தான்: சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 10 பேர் காயம்


பாகிஸ்தான்: சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 10 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Jun 2022 8:46 PM IST (Updated: 22 Jun 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ரஹிமாபாத் பகுதிக்கு அருகே சென்றபோது அதிவேகமாக திரும்பியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

1 More update

Next Story