ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் 6 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய ஆபரேசனில் 6 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய ஆபரேசனில் 6 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தரப்பில் கூறியதாவது:
எங்களுக்கு கிடைத்த சிறப்பு தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் உள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறையினர் இந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த 6 பயங்கரவாதிகளும் குல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.