இந்தியாவில் கடத்தல் தங்கம் சிக்குவது 62.5% அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்


இந்தியாவில் கடத்தல் தங்கம் சிக்குவது 62.5% அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
x

நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 384 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரி 7.5%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு 2,155 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அதே போல் 2021-ம் ஆண்டு 2,383 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியதாகவும், 2022-ம் ஆண்டு 3,502 கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை கடத்தல் தங்கம் சிக்குவது 62.5% அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 384 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.




Next Story