மாநிலங்களவை தேர்தல் - 7 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பளிக்காத பா.ஜனதா


மாநிலங்களவை தேர்தல் - 7 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பளிக்காத பா.ஜனதா
x
தினத்தந்தி 15 Feb 2024 11:26 AM GMT (Updated: 15 Feb 2024 12:11 PM GMT)

வாய்ப்பு வழங்கப்படாத மத்திய மந்திரிகளை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி போட்டியிடுகிறார். குஜராத்தில் இருந்து பா.ஜனதா தலைவர் நட்டா போட்டியிடுகிறார்.

காலியாகும் 56 இடங்களில் 28 இடங்கள் பா.ஜனதாவை சேர்ந்தது ஆகும். பதவிக்காலம் காலியாகும் 28 பேரில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதில் 2 பேர் மத்திய மந்திரிகள் ஆவர்.

அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த எல். முருகன் . இவர் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மற்றொருவர் அஸ்வினி வைஷ்ணவ். இவர் ஒடிசாவில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெறும் அளவுக்கு அந்த மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. என்றாலும் ஆளும் பிஜு ஜனதாதளம் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு போட்டியிடுகிறார்.

இந்த 2 மத்திய மந்திரிகள் தவிர மேலும் 7 மத்திய மந்திரிகளின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஏப்ரல் மாதம் காலியாகிறது. அவர்களின் பெயர்கள், எந்த மாநிலத்தில் இருந்து வெற்றி பெற்றனர் என்ற விவரம் வருமாறு:-

1) சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா (குஜராத்)

2) மீன்வள மந்திரி புருஷோத்தம் ரூபாலா (குஜராத்)

3) தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திர சேகர்(கர்நாடகம்)

4)சிறு தொழில் துறை மந்திரி நாராயண்ரானே(மராட்டியம்)

5) வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளீதரன் (மராட்டியம்)

6) சுற்றுச்சசூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்)

7) கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் (ஒடிசா)

இதில் முரளீதரன் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மற்ற 6 பேரும் தங்களது மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர்.


Next Story