மும்பை விமான நிலையத்தில் 7.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

Image Courtesy : ANI
மும்பை விமான நிலையத்தில் 7.8 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை,
மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7.8 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 5 கோடியே 54 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் குழாய்களிலும், உள்ளாடைகளிலும் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல், மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் 18 பேரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






