வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி


வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் பலி
x

வட இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

லக்னோ,

இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட இந்தியாவில் நிலவி வரும் அதீத வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் என மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வெப்ப அலை காரணமாக காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக 500-க்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.


Next Story