ஆதார் கார்டு கேட்டதற்காக சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபர்..!


ஆதார் கார்டு கேட்டதற்காக சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபர்..!
x

மத்தியபிரதேசத்தில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்ணை அறைந்ததாகக் கூறி வாகன ஓட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பயோரா தேஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜ்கர்-போபால் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜர்கடியாகேடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் குர்ஜார் என்பவர், சுங்கச்சாவடியினுள் நுழைந்தபோது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் அவரிடம் ஆதார் அட்டையை கேட்டுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற தான் ஒரு உள்ளூர்வாசி என்று கூறியுள்ளார். எனவே அவரிடம் பெண் ஊழியர் உள்ளுவர்வாசி என்பதை உறுதிப்படுத்த ஆதார் அட்டையை கேட்டார். இதனால் கோபமடைந்த குர்ஜார், பெண் ஊழியரை அறைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தப்பியோடிய குர்ஜார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story