டாக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


டாக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
x

டாக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு வடக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பத்மினி பிரசாத். டாக்டரான இவர், தாம்பத்தியம் தொடர்பான விவகாரத்தில் பெண்களுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், டாக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு (பேஸ்புக்) தொடங்கிய மர்மநபர், பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த டாக்டருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபரையும் தேடிவந்தார்கள்.

இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடியில் ஈடுபட்டு வந்த ஜெகதீஸ் என்பவரை கைது செய்துள்ளனர். இவர், டாக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பெண்களுடன் பேசி வந்துள்ளார். அந்த பெண்களின் செல்போன் எண்ணை பெற்று ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வைத்து தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.


Next Story