வேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்


வேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்
x

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஒரு தம்பதியை கைது செய்துள்ளனர்.

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு ஆரிப் பாபேரி என்பவர் அறிமுகம் ஆனார். பெலகாவியில் வேலை இருப்பதாகவும், அந்த வேலையை வாங்கி கொடுப்பதாகவும் கூறி அந்த பெண்ணை ஆரிப் பாபேரி பெலகாவிக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணை அங்கு ஒரு அறையில் தங்க வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் சமூகத்திற்கு மாற வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களிடம் உள்ள ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர். மேலும் ஹிஜாப் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து, நடந்தவை குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஒரு தம்பதியை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story