சுற்றுலாவிற்கு சென்ற பள்ளி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்


சுற்றுலாவிற்கு சென்ற பள்ளி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
x

மாணவர்களும், ஆசிரியர்களும் பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேறியதால், அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், கேரளாவின் மூணாறு பகுதிக்கு சுற்றுலாவிற்காக பள்ளி பேருந்தில் சென்றுள்ளனர். அந்த பேருந்து தலையாறு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

முன்னதாக பேருந்தில் இருந்து புகை வரத் தொடங்கியதும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பேருந்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் வேகமாக வெளியேறியதால், அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story