இதய நோயாளியுடன் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்... குறுக்கே ஓடிவந்த சிறுவனை தூக்கிவீசிய பயங்கரம்


x

இடுக்கி அருகே வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், சாலையை ஓடி கடக்க முயன்ற 14 வயது சிறுவன் மீது மோதியதில், சிறுவன் படுகாயமடைந்தான்

இடுக்கி:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று, இருதய நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக, கோட்டயம் நோக்கி அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது அடிமாலி ஜங்ஷன் பகுதியில், 14 வயது சிறுவன் ஒருவன் சாலையை ஓடி கடக்க முயன்றுள்ளான்.

அந்த நேரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சிறுவனை ஆம்புலன்ஸ் தூக்கிய வீசிய அக்காட்சி பார்ப்பொர் நெஞ்சை பதபதக்க வைக்கிறது.

1 More update

Next Story