நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்


நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்
x

குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்,

குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story